ETV Bharat / state

ஒரு கிலோ முட்டைகோஸ் 2 ரூபாய்க்கு கொள்முதல்;  விவசாயிகள் வேதனை - Talavadi

மார்க்கெட்களில் முட்டைகோஸ் கிலோ ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டாலும் விவசாயிகளிடம் கிலோ 2 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

Farmers have suffered loss due to not getting proper price for cabbage
முட்டைக்கோசுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்
author img

By

Published : Feb 26, 2023, 4:56 PM IST

முட்டைக்கோசுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்

ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன்குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் முட்டைகோஸை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப் பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி காரணமாக ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து முட்டைகோஸ் இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் முட்டைகோஸை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்குவாரி மாஃபியாக்களால் அழியும் விவசாயம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.