ETV Bharat / state

கிணறு தோண்டப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு: கொடிவேரி அணையின் உள்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கு கிணறு தோண்டப்படுவதைக் கண்டித்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kodiveri
author img

By

Published : Jul 13, 2019, 7:35 PM IST

கொடிவேரி அணையின் உள் பகுதியிலிருந்து அதாவது தடப்பள்ளி பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத கிணறு அமைக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கியுள்ளது.

இதனால், தட்டப்பள்ளிக்கு வரும் தண்ணீர் வரத்து குறையும், மூன்று தாலுகா பாலை வனமாக, கொடிவேரி அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் எனக்கூறி இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடிவேரி பாசன விவசாயிகள், மீனவர்கள், கோபிசெட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரியார் திடலில் உண்ணாவிரத போராட்டம் செய்ய முடிவெடுத்தனர்.

கவன ஈர்ப்பு போராட்ட காட்சிகள்

அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தனியார் திருமண மண்டபத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இதில், பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவதால் கொடிவேரி அணைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கவன ஈர்ப்பு போராட்டத்துடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கொடிவேரி பாசன பகுதிகளான கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம், கூகலூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள், பொதுமக்கள் என 5,000க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்.

Intro:கொடிவேரி அணையின் உள் பகுதியில் குடிநீர் திட்டத்திற்கு கிணறு தோண்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கவன ஈர்ப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டம்Body:tn_erd_05_sathy_farmers_stike_vis_tn10009

கொடிவேரி அணையின் உள் பகுதியில் குடிநீர் திட்டத்திற்கு கிணறு தோண்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கவன ஈர்ப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்…

கொடிவேரி அணையின் உள் பகுதிலிருந்து அதாவது தடப்பள்ளி பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத கிணறு அமைக்கும் பணியை குடிநீரி வடிகால் வாரியம் தொடங்கியுள்ளது. இதனால் தடப்பள்ளிக்கு வரும் தண்ணீர் குறையும் என்றும் மூன்று தாலுக்கா பாலை வனம் ஆகும் சூழல் ஏற்படும் எனவும் கொடிவேரி அணையின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிவிடும் என்றும் சுற்றுலா தலம் பாதிக்கப்படும் எனக்கூறி கொடிவேரியின் உள் பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தை அணையின் மேற்புறத்திலோ அல்லது அணையின் கீழ் புறத்திலோ செயல்படுத்தவேண்டும் எனக்கோரி கொடிவேரி பாசன விவசாயிகள் மீனவர்கள் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் பெரியார் திடலில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டபோது காவல்துறையின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தனியார் திருமணமண்டபத்தில் கவன ஈர்ப்பு கூட்டதை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் கொடிவேரி அணையினுள் செயல்படுத்தினால் அணையின் பாதிப்பு குறித்தும் தடப்பள்ளி வாய்காலுக்கு வரும் தண்ணீர் தடை என்றும் விவசாயிகளிடம் எடுத்துரைத்து வருகின்றனர். மேலும் கவன ஈர்ப்பு போராட்டத்துடன் உள்ளிருப்பு போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இப்போராட்டத்திற்கு கொடிவேரி பாசன பகுதிகளான கோபிசெட்டிபாளையம் டி.என்.பாளையம் கூகலூர் கள்ளிப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றுள்ளனர். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.