தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் முட்டைகோஸ், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.2க்கு குறைவாக விற்கப்பட்டதால், விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர்.
கரோனா பிரச்சனையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த விவசாயிகள் தக்காளி சாகுபடியை குறைத்து முட்டைகோஸூக்கு மாறினர். இதனால் தக்காளி சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்ததால் தற்போது தக்காளி வரத்தும் சரிந்துவிட்டது.
தற்பொது மழை பெய்து வருவதால் தக்காளி பூ, மொட்டுகள் மழையில் அழுகிவிடுதால் அதன் மகசூல் குறைந்துவிட்டது. இதனால் கடந்த மாதம் ரூ.5 க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ.20க்கு விற்கப்பட்டது.
வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து கொள்முதல் செய்து, உடனடியாக பணம் பட்டுவாடா செய்கின்றனர். கரோனா பிரச்னையால் நஷ்டத்தைச் சந்தித்த விவசாயிகளுக்கு, தற்போது இரு வாரங்களாக தொடர்ந்து தக்காளியின் விலையேற்றம் காரணமாக, மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 8 டன் வரை மகசூல் கிடைப்பதால், கிலோவுக்கு ரூ.15 வரை லாபம் கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.