ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசைகுட்டி. அப்பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டி இவரது விவசாயத் தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்றிரவு (டிசம்பர் 9) வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை அம்மாசைகுட்டியின் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதைக்கண்ட விவசாயி அம்மாசைகுட்டி யானையை விரட்டுவதற்காக வாழை தோட்டத்திற்கு சென்றபோது யானை ஆக்ரோசத்துடன் அம்மாசைகுட்டியை துரத்தியது. தப்பி ஓட முயன்ற அம்மாசைகுட்டியை யானை தனது தும்பிக்கை தாக்கியதில் கீழே விழுந்தார். அப்போது யானை அவரது கால் மீது ஏறியதால் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அம்மாசைகுட்டியின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காட்டு யானையை விரட்டினர். அம்மாசைகுட்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் அரசு மருத்துவமனையில் உருவான திடீர் குளம்.. பொதுமக்கள் அவதி...