ETV Bharat / state

யானை தாக்கிய விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை! - யானை தாக்கிய விவசாயி

அந்தியூர் அருகே ஒற்றை யானை தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

யானையால் தாக்கப்பட்ட  விவசாயி
elephant attack
author img

By

Published : May 8, 2021, 10:39 PM IST

ஈரோடு மாவட்டம், பூதப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், அந்தியூர் செல்லம்பாளையம் வனப்பகுதியை ஒட்டி உள்ள தன்னுடைய அக்கா வீட்டு தோட்டத்தில் தங்கிப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இன்று(மே.8) காலை 7 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றபோது, வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தோட்டத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை ஒன்று அவரை துரத்தியது.

தப்ப முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷை யானை காலால் மிதித்தது. இதில் அவரது கால், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்த விவசாயின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் விவசாயி வெங்கடேஸ்வரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அந்தியூர் வன சரக அலுவலர் உத்திரசாமி, சிகிச்சை பெற்று வரும் வெங்கடேஸ்வரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபோன்று யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பெண் உள்பட இருவர் கைது: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.