ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் யானை தாக்கி விவசாயி படுகாயம்! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த உகினியத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி படுகாயம்
விவசாயி படுகாயம்
author img

By

Published : Mar 24, 2021, 10:00 AM IST

சத்தியமங்கலம் அடுத்த உகினியத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்ராஜ் (55). இவர், இன்று (மார்ச் 24) இருசக்கர வாகனத்தில் மாவள்ளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியிலிருந்த காட்டுயானை சின்ராஜை பார்த்து வேகமாக ஓடிவந்து தாக்கியது. இதில் படுகாயமடைந்த சின்னராஜை கிராம மக்கள் காப்பாற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் வாழும் யானைகள் தீவனம் தேடி அலைந்து, கிராமப்புரத்தில் நுழைந்து, மக்களுக்கு இடையூறு கொடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.