ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு! - விபத்து

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த விவசாயியை யானை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி  விவசாயி உயிரிழப்பு

author img

By

Published : Dec 26, 2022, 12:15 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இங்கு யானைகள் சாலையோரம் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில், கடம்பூர் மலை பகுதி ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி(44) என்பவர் தனது நண்பருடன் குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக இருசக்கர வானத்தில் வனச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அஞ்சனை பிரிவு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதி அருகே சென்ற போது, புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலைக்கு வந்தது. இரவு நேரத்தில் திடீரென யானை சாலைக்கு வந்ததால் அச்சமடைந்த விவசாயி பழனிசாமி, செய்வதறியாமல் திகைத்த நிலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை கண்ட காட்டு யானை, துரத்தி தாக்கியதில் விவசாயி பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த நபர் வேகமாக தப்பி ஓடி மயிரிழையில் உயிர் தப்பினார். இது குறித்து கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி கூறுகையில் "மழை காலம் என்பதால் கொசு தொல்லைக்கு அஞ்சும் யானைகள் சாலையோரம் வருவது வழக்கம். அதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: காட்டிற்குள் விரட்ட முயன்ற வனத்துறையினரை விரட்டிய யானையின் பகீர் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.