ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு மாவட்டத்தை இரு மாவட்டங்களாகப் பிரித்து கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக்க எங்கள் கட்சி சார்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தினோம்.
நாகப்பட்டினத்தை இரண்டாகப் பிரிக்க ஓ.எஸ். மணியன் வலியுறுத்தினார், அதையேற்ற முதலமைச்சர் அதுபற்றி பரிசீலனை செய்வதாக அறிவித்தார். அதேபோல அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மேட்டூர் உபரி நீர்த்திட்டத்தின்கீழ், அதிலிருந்து பெறப்படும் நீரை அந்தியூர் வரை கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'எதிர்க்கட்சிகளால் தான் தமிழ்நாடு அரசு வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது' - ஈஸ்வரன்!