ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது சத்தியமங்கலம் வட்டாரத்தில் அதற்கான கால சூழ்நிலை நிலவுவதால் மரவள்ளிக்கிழங்குகள் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.
10 மாத பயிரான மரவள்ளிக்கிழங்கு பிப்ரவரி மாதம் நடவு செய்யப்பட்டடு கிணற்றுப்பாசனம், மானாவாரி, சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்ய குறைந்த செலவே ஆவதாகவும், கரும்பு, வாழை போன்று அதிகமான மனித உழைப்பு இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது 10 மாதம் முடிந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள மரவள்ளிக்கிழங்கை செடியிலிருந்து பிடுங்கி அதன் அடிபாகத்தில் சுமார் இரண்டு கிலோ வரை உள்ள மரவள்ளிக்கிழங்கை வெட்டி சேகரிக்கும் பணி தொடங்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் நெகமம் பிரிவில் இன்று மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு 20 டன் வரை மகசூல் கிடைத்தது.
தற்போது அதிகபட்சமாக 18 ஆயிரம் ரூபாய்வரை விலை விற்பதால், ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு வறட்சியின் காரணமாக ஏக்கருக்கு 14 டன் கிடைத்தது. தற்போது தொடர் மழையால் நன்கு திரண்டு மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதால் ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 20 டன் வரை கிடைத்துள்ளது. கொள்முதல் செய்த மரவள்ளிக்கிழங்கு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க:
அரசின் அலட்சியத்தால் கையை இழந்து உயிருக்குப் போராடும் பள்ளி மாணவர்!