கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து, அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் செயல்பட தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பஞ்சர் கடைகள் மூடப்பட்டுள்ளதாலும், மாநிலம் முழுவதும் சில பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் காற்று நிரப்ப மறுக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பலர் வாகனங்களில் காற்றில்லாமல் அவதியுறுகின்றனர்.
இதையடுத்து, வாகன ஓட்டிகள் பலர் அத்தியாவசிய கடைகளின் பட்டியலில் பஞ்சர் கடைகளையும் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் பார்க்க: மருத்துவர்கள் போல் பேசி வதந்தி - தேடுதல் வேட்டையில் காவல்துறை