ETV Bharat / state

டிப்பர் லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - டிப்பர் லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஈரோட்டில் மணல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரியும், எதிரே வந்த காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

accident  road accident  erode accident  tipper truck and vegetable lorry accident  erode news  erode latest news  விபத்து  லாரி விபத்து  ஈரோடி லாரி விபத்து  சாலை விபத்து  டிப்பர் லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து  ஈரோடு செய்திகள்
விபத்து
author img

By

Published : Oct 23, 2021, 7:57 AM IST

ஈரோடு: கரூரிலிருந்து ஈரோட்டிற்கு நேற்று (அக்.22) காலை மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரியும், காய்கறி மார்க்கெட்டிலிருந்து தக்காளி, வெங்காயம் ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரியும், பஞ்சலிங்கபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் காய்கறி வாகனத்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களான பூபதி மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் மொடக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் மொடக்குறிச்சி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலம்; கிணற்றில் எலும்புக் கூடாய் மிதந்த கல்லூரிப் பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.