சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், துண்டன்சாலை, கரிதொட்டம்பாளையம், கொழிஞ்சானூர், செம்படாபாளையம், கொண்டப்பநாயக்கன்பாளையம், ஆகிய கிராமங்களில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கோயில்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அம்மன் சிலையின் கழுத்திலிருந்து தாலி, வெள்ளி கிரீடம், உண்டியல், உள்ளிட்டவை திருடு போயின.
கோயில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் திருடன் யார் என்பது குறித்து சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் பங்களாப்புதூர் ஆகிய மூன்று காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோயில்களில் கொள்ளையடித்த நபர் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பவானிசாகர் காவல்துறையினர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 29) என்பவனை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது கோயில்களை குறிவைத்து கொள்ளயடித்த நபரை சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பிடித்து விசாரணை செய்து வருவதாகவும், ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டில் பல்வேறு பகுகளில் கோயில்களில் கொள்ளைடித்த வழக்கில் கைது செய்யப்பட்டதோடு பல்வேறு வழக்குகள் இவன் மீது உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஓய்வெடுத்தவரின் மேல் ஏறிய கார்! ஓட்டுநர் யார்?