சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த முதியனூரைச் சேர்ந்தவர் சிவன்னா. இவரது மனைவி குமாரி (25). அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருடன் குமாரிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக கணவரைப் பிரிந்து சென்ற குமாரி, இளைஞர் தினேஷ்வுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு உறவினர்கள் குமாரியிடம் கணவருடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தியதையடுத்து, குமாரி கணவர் சிவன்னா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தினேஷ் குமாரியிடம் தகராறு செய்து, கணவரை பிரிந்து வருமாறு தினேஷ் தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த குமாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக குமாரியை தற்கொலைக்கு தூண்டிய தினேஷை கைதுசெய்ய வேண்டும் எனக் குமாரியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், டிஎஸ்பி சுப்பையா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர்,இவ்வழக்கு தொடர்பாக தினேஷ் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்தநிலையில் இன்று தாளவாடி காவல் துறையினர் தினேஷை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!