ஈரோடு மாவட்டம், மலையம்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது விநாயகர் மற்றும் நடராஜர் சிலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலைகளை மீட்டு கொடிமுடி வட்டாச்சியர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட சிலைகள் ஐம்பொன் சிலைகளா என்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.