ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி, வேடன் நகரில் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய, இடைநின்ற பள்ளி மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களின் திறமையை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவியரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய பொருள்கள் முழுவதும் கிராமப்புறத்தில் கிடைக்கும் பொருள்களை கொண்டு உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டது.
அறிவியல் கண்காட்சி சந்திர கிரகணம், சூரிய கிரகணம், ஒளிச்சிதறல் டெலஸ்கோப், இயற்கை விவசாயம், பழங்களில் உள்ள வேதிப்பொருள்கள் குறித்து விளக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் படைப்புகளை ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்டு குறிப்பெடுத்தனர்.
இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் கிராமப்புற மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதுடன் இளம் விஞ்ஞானிகளாக வருவதற்கான அடித்தளம் இருக்குமென்று ஆசிரியர் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!