ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு! - புதிய இயந்திரத்தை கண்டுபிடித்த பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லுரி மாணவர்கள்.

பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்த தனியார் பொறியியல் கல்லுரி மாணவர்கள்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு!

author img

By

Published : Dec 5, 2019, 3:24 PM IST

கடந்த சில வருடங்களாக இயற்கை பேரிடர் தமிழ்நாட்டை அதிகமாகவே தாக்கிவருகிறது. குறிப்பாக, தலைநகரான சென்னையை பருவமழை காலங்களில் தொடர்ச்சியாகவே இயற்கை பேரிடர் தாக்கி வருகின்றது.

அதுபோன்ற பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்பதில் பெரும் போராட்டத்தை சந்திக்கும் நிலையில், அவர்களின் மீட்பு பணியை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

இந்த இயந்திரம் முழுவதும் பிவிசி பைப்புகளைக் கொண்டு, நீர் புகாதவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கிலோ எடைகொண்ட இந்த இயந்திரத்தில் ஜிபிஎஸ்ஸூம் பொருத்தப்பட்டுள்ளது. இயந்திரம் சுமார் 80 கிலோ எடையுள்ளவர்களை இழுக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து 5 மணி நேரம் செயல்பட்டு நீரில் மூழ்கிய வரை காப்பாற்றும் திறன் கொண்டது.

தேசிய அளவிலான விஸ்வகர்மா விருதினை முதல் சுற்றிலேயே இந்த இயந்திரம் பெற்றுத்தந்துள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் இந்திய தொழில்நுட்பக் குழு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இந்த இயந்திரத்தை பண்ணாரி அம்மன் கல்லூரியைச் சேர்ந்த இயந்திரவியல் மாணவர் கே. யுவன்சங்கர், மின்னணுவியல் மாணவிகள் சந்தியா, ஆர் ரம்யா மற்றும் கணினி அறிவியல் மாணவிகள் இந்திரா, பிரியதர்ஷினி, மைதிலி ஆகியோர் ஆய்வகப் பொறியியல் பயிற்சியாளர்கள் கே. நந்தகுமார், டி. செல்லம், முத்துக்குமரன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க...' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்துகிறது ' - கே.எஸ். அழகிரி

Intro:tn_erd_01_sathy_innovation_vis_tn10009

Body:பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரத்தை பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர் ரூபாய் 40 ஆயிரம் செலவில் உருவாக்கிய இந்த இயந்திரம் செயல்பாட்டின் போது நீரில் புகாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் எடை 5 கிலோ கொண்டதாக உள்ளதால் இந்திர முழுவதும் பிவிசி படைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த கருவியில் வெப்பநிலை சென்சார் ஜிபிஎஸ் வழிசெலுத்தல் ஆகியவை அடங்கும் நீரில் மூழ்கிய வரை காப்பாற்ற செல்லும்போது 80 கிலோ எடை கொண்ட மனிதர்களை தாங்கி இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது ஓரிடத்தில் அமர்ந்தபடி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து 5 மணி நேரம் போராடி நீரில் மூழ்கிய வரை காப்பாற்றும் திறன் கொண்ட இந்த இயக்கத்துக்கு தேசிய அளவிலான விஸ்வகர்மா விருது முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள் வரும் ஜனவரி மாதம் இந்திய தொழில்நுட்பக் குழு நடத்தும் போட்டிக்கு தேர்வாகியுள்ளது இக் கல்லூரியை சேர்ந்த இயந்திரவியல் மாணவர் கே யுவன்சங்கர் மின்னணுவியல் சந்தியா ஆர் ரம்யா கணினி அறிவியல் இந்திரா பிரியதர்ஷினி மைதிலி ஆகிய மாணவர்களும் மாணவிகளும் ஆய்வகப் பொறியியல் பயிற்சியாளர்கள் கே நந்தகுமார் டி செல்லம் முத்துக்குமரன் ஆகியோர் இணைந்து இந்த கருவியை உருவாக்கி உள்ளனர் இந்த கருவியை சோதனை ஓட்டமாக நஞ்சை புளியம்பட்டி அடுத்த கால்வாயில் பயன்படுத்தி வெற்றிகரமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.