தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள சத்தியமங்கலத்திலிருந்து 11 தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கர்நாடகப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும் போது வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், தற்போது பேருந்தில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த காரணத்தினால் பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், திம்பம் ஆகிய பகுதிகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும், வைரஸ் பரவாமல் இருக்க பேருந்து நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: எல்லையை மூடிய இஸ்ரேல்