ETV Bharat / state

கொட்டப்படும் கழிவுகள்: தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஈரோடு: மொடக்குறிச்சியல் செயல்பட்டு வரும் தனியார் கோழிக்குஞ்சு பொறிப்பகத்திலிருந்து முட்டை கழிவுகள் மற்றும் உயிருடன் கோழிகளை அருகே உள்ள பள்ளத்தில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக்கூறி, அப்பகுதி மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ERODE PUBLIC PROBLM
author img

By

Published : May 8, 2019, 3:14 PM IST

Updated : May 8, 2019, 10:35 PM IST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள மஞ்சகாட்டு வலசு பகுதியில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கோழிக்குஞ்சு பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து முட்டை கழிவுகள், ஊனமுற்றக் கோழிகள் உயிருடன் அருகே செல்லும் பயன்படுத்தப்படாத பள்ளத்தில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மஞ்சகாட்டுவலசு, துாரபாளையம், காட்டுபாளையம், பெருமாபாளையம், மேட்டூர், சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, இந்தக் கழிவுநீர் அருகே செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் கலப்பதால், விளைநிலம், நிலத்தடி நீர், கிணறுகள் உள்ளிட்டவைகள் மாசடைகிறது.

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், மொடக்குறிச்சி தாசில்தாரிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அந்த நிறுவனத்திலிருந்து ஊனமுற்ற கோழிக்குஞ்சுகள், கழிவுகளை வெளியேற்றியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளதால், இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அந்நிறுவனத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதாகவும், கோழிக்குஞ்சுகளை வெளியே கொட்டாமல் அதனை மீன் பண்ணைகளுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஈரோடு     08-05-19                                              சதாசிவம்
                 
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து உயிருடன் கோழிகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாககூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்...                                  
                              
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள மஞ்சக்காட்டு வலசு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கோழி குஞ்சு பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்கப்பட்டு அதனை கறிக்கோழி கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோழி குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து  முட்டை கழிவுகள் மற்றும் ஊனமுற்ற கோழிகளை உயிருடன் அருகே செல்லும் பள்ளத்தில் வெளியேற்றப்படுகிறது. இதனால்  மஞ்சகாட்டுவலசு, தூரபாளையம், காட்டுபாளையம், பெருமாபாளையும், மேட்டூர், சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. மேலும் பள்ளத்தில் விடப்படும் கழிவு நீர் அருகே செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் விவசாயம் விளை நிலம், நிலத்தடி நீர், கிணறுகள் உள்ளிட்டவைகள் மாசு அடைகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மொடக்குறிச்சி தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று கோழி குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து ஊனமுற்ற கோழி குஞ்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைக் கண்டித்து  அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்நிறுவனத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..அப்போது கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதாகவும் கோழிக்குஞ்சுகளை வெளியே கொட்டாமல் அதனை மீன் பண்ணைகளுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.. இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.. 

Visual send ftp..
FILE NAME:TN_ERD_01_08_PUBLIC_PROBLEM_VISUAL_7204339
Last Updated : May 8, 2019, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.