கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் உத்தரவை பின்பற்றாமல் வெளியில் சுற்றிவருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்தம் வகையில், மாநிலம் முழுவதும் காவல் துறையினர் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.
அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் வெளியில் சுற்றிய 63 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் அலட்சியம்: விரட்டியடித்த காவல்துறையினர்