ஈரோடு: காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், மூன்று பேர் பயணித்தல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துவருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஆறாயிரத்து 115 வழக்குகள் ஈரோடு மாவட்ட காவல் துறையினரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தலைக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 75 விழுக்காடு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.
இந்நிலையில் நாளை (அக். 13) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா? - வைகோ விளக்கம்