ETV Bharat / state

கருமுட்டை விவகாரம்: இந்திய மருத்துவ கவுன்சில் ஆதரவுடன் போராட்டம்!

16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்துள்ள நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

கருமுட்டை விவகாரம்: இந்திய மருத்துவ கவுன்சில் ஆதரவுடன் போராட்டம்!
கருமுட்டை விவகாரம்: இந்திய மருத்துவ கவுன்சில் ஆதரவுடன் போராட்டம்!
author img

By

Published : Aug 6, 2022, 7:58 AM IST

Updated : Aug 6, 2022, 8:30 AM IST

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர், இடை தரகர் மாலதி மற்றும் ஆதார் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வழங்கிய ஜான் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை ஸ்கேன் சென்டர்களுக்கு முதற்கட்டமாக சீல் வைக்கவும், இதற்காக 15 நாட்கள் அவகாசம் அளித்து நோயாளிகளை வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைக்கபட்டதை ரத்து செய்தும், நோயாளிகளை மீண்டும் அனுமதிக்கவும் உத்தரவிட்டார்.

கருமுட்டை விவகாரம்: இந்திய மருத்துவ கவுன்சில் ஆதரவுடன் போராட்டம்!

இவ்வாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி அமர்வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி ஈரோடு சுதா மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சிறுமியிடம் கருமுட்டை பெற்ற மருத்துவமனைக்கு ஆதரவாக இந்திய மருத்துவ கவுன்சில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய துணை தலைவர் ராஜா, “மருத்துவமனையில் நடக்கும் தவறுக்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒத்துழைப்பு அளிக்கும். அதற்காக மருத்துவமனையை மூடுவது என்பதை, இந்திய மருத்துவ கவுன்சில் அதிகப்படியான தண்டனையாக கருதுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து கரோனா காலத்தில் சிகிச்சை அளித்து தடுப்பூசிகள் வழங்கினார்கள்.

மருத்துவமனையில் ஒரு துறையில் நடந்த தவறுக்கு, ஒரு பல்நோக்கு மருத்துவமனையை மூடுவதை கண்டித்து மாவட்டம் முழுவதும் உள்ள 250 மருத்துவமனையில் உள்ள 800 மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை இயக்குநர் பிரம்மகுமாரி கூறுகையில், “தற்போது சுதா மருத்துவமனையில் 90 நோயாளிகள் இருக்கின்றனர். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியபடுத்தி உள்ளோம். இன்று நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன் நீதிமன்ற உத்தரவு நடைமுறைபடுத்தப்படும்” என கூறினார்.

இதையும் படிங்க: கருமுட்டை விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

Last Updated : Aug 6, 2022, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.