ETV Bharat / state

இளைஞர் கொலை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கோபிசெட்டிபாளையம் அருகே இளைஞர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ருள்ளது.

erode murder issue
erode murder issue
author img

By

Published : Aug 11, 2021, 11:07 AM IST

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் மில்மேடு அம்மன்நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கராஜ். இவரது மகன் செந்தில்குமார் கூலி வேலை செய்து வந்ததுடன் அவரது அம்மா ராசாத்தி நடத்தி வந்த இட்லி கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்குமார் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த திம்மநாயக்கர் மகன் சின்ராஜ் என்பவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு 1,800 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அன்று செந்தில்குமார் கொடுத்த பணத்தை சின்ராஜூடம் திரும்ப கேட்டுள்ளார். கடன் கேட்டு இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இளைஞரை கத்தியால் குத்திய குடும்பம்

2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று செந்தில்குமார், அவரது தாயார் ராசாத்தி ஆகியோர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சின்ராஜ் அவரது மனைவி பழனியம்மாள் என்கிற கண்ணம்மாள், மகள் ரம்யா, மருமகன் பால்ராஜ், அவரது உறவினர்கள் பெரியூர் கடனபொம்மன் வீதியை சேர்ந்த சுதாகர் தர்மராஜ், ஆகியோர் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று, அங்கு இருந்த செந்தில்குமாரை சராமரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

இளைஞர் கொலை
இளைஞர் கொலை

இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து செந்தில்குமாரை கொலை செய்த சின்ராஜ், அவரது மனைவி பழனியம்மாள், மகள் ரம்யா, மருமகன் பால்ராஜ், உறவினர்கள் சுகாதர, தர்மராஜ் ஆகியோர் மீது கடத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து சின்ராஜ் உட்பட ஆறு பேரையும் கைது செய்து அவர்களை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், செந்தில்குமாரை கொலை செய்த சின்ராஜ், பால்ராஜ், தர்மராஜ், சுதாகர், ரம்யா, பழனியம்மாள் ஆகிய ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க : மதுபோதையில் விபத்து - மருந்து கடை உரிமையாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.