ETV Bharat / state

குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

ஈரோடு: மாநகரின் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.

erode motorists suffer damage road, ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
author img

By

Published : Oct 30, 2019, 7:51 PM IST

ஈரோடு மாநகரில் பாதாளச் சாக்கடை திட்டம், பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பு, ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து நடைபெற்றுவருகின்றன. இதற்காக மாநகரின் முக்கியச் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்றுவருவதால், நகரின் முக்கியச் சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.

erode motorists suffer damage road, ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டூர் சாலையில் நடைபெற்றுவந்த பணிகள் முடிவுற்றாலும் தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை, புழுதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள கடைகளிலும் புழுதிபடிந்து வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தங்களின் சிரமத்தை போக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை பாதாளச் சாக்கடை பிரச்னை...மக்கள் வேதனை !

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.30

ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

ஈரோடு மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் தினசரி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Body:ஈரோடு மாநகரில் பாதாளச் சாக்கடை திட்டம், பி.எஸ்.என்.எல். கேபில் பதிப்பு, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநகரின் முக்கிய சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மிக நீண்ட நாட்களாக இந்த பணிகள் நடைபெற்று வருவதால் நகரின் முக்கிய சாலைகள் மிகுந்த போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேட்டூர் சாலையில் நடைபெற்று வந்த பணிகள் முடிவுற்றாலும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாததால் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலை என்பதால் எப்போது போக்குவரத்து நெரிசலாக காணப்படும் சாலை இப்போது புழுதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள கடைகளிலும் புழுதி படிந்து காணப்படுகிறது.

Conclusion:எனவே மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.