ETV Bharat / state

' உன்னை கொன்றுவிடுவேன்' - ஈரோடு காய்கறி சந்தை சங்க உறுப்பினருக்கு கொலை மிரட்டல்! - MARKET

ஈரோடு: நேதாஜி காய்கறி சந்தை கணக்கு விவரத்தை கேட்ட சங்க உறுப்பினரை சங்கத் தலைவரின் மகன்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சங்க உறுப்பினரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த சங்க தலைவர் மீது புகார்
author img

By

Published : May 9, 2019, 8:19 AM IST

ஈரோடு நேதாஜி தினசரி சந்தையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு ஆண்டுதோறும் கடைகளுக்கு ரூ. 1000 சந்தா என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சங்கத் தலைவர் பி.பி.கே. பழனிச்சாமி தலைமையில் கணக்கு வரவு செலவு கூட்டம் நடைபெற்றது.

அப்போது சங்கத்தின் உறுப்பினரான பி. ஆர்‌. தர்மபுரியான் என்பவர் 15 ஆண்டு வரவு செலவு கணக்கை காட்டுமாறு கேட்டுள்ளார். இதில், விவாதம் ஏற்பட சங்கத் தலைவரின் மகன்கள் திடீரென தர்மபுரியானை அடித்து உதைத்து சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினரான பி.ஆர். தர்மபுரியான் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார்.

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சங்க உறுப்பினரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த சங்க தலைவர் மீது புகார்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தர்மபுரியான், நேதாஜி தினசரி சந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக 20 கோடி வரை சந்தா தொகையை தலைவர், ஐந்து நிர்வாகிகள் மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

ஈரோடு 08.05.2019
சதாசிவம்

ஈரோடு நேதாஜி மார்க்கெட் சங்கத்தில் கணக்கு கேட்டு சங்க உறுப்பினரை அடித்த உதைத்து கொலை மிரட்டல் விடுத்த சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் தக்காளி கடை .வெங்காய கடை. காய்கறி கடை என சுமார் 800க்கும் மேற்பட்ட கடைகள் இருந்து வருகின்றன 

இந்தக் கடைகளுக்கு ஆண்டுதோறும் ரூ 1000 சந்தா என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று மார்க்கெட்  சங்கத் தலைவர் பி பி கே பழனிச்சாமி தலைமையில் சங்கத்தின் கணக்கு வரவு செலவு கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினரான தக்காளி கமிஷன் கண்டியைச் சேர்ந்த பி.ஆர்‌தர்மபுரியான் என்பவர்  கடந்த 15 ஆண்டு வரவு செலவு கணக்கை கேட்டுள்ளார்.
அப்போது சங்கத்தின் தலைவர் மகன்களான மணிகண்டன்.வினோத்  ஆகிய இருவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டவர்கள் தன்னை கொலை வெறி தாக்குதல் நடத்தி சட்டையை பிடித்து அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனார் என பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினரான பி ஆர் தர்மபுரியான் என்பவர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டையை கிழித்தவாறு வந்து  தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என  வலியுறுத்தி புகார் மனு அளித்தார் பின்னர் 

பின்னர் பாதிக்கப்பட்ட தர்மபுரியான் பேட்டி அளிக்கையில் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளாக 20 கோடி வரை சந்தா தொகையை தலைவர் மற்றும் ஐந்து நிர்வாகிகள் மோசடி செய்து விட்டதாக தெரிவித்தார்...

Visual send mojo app
File name:TN_ERD_02_08_MARKET_ISSUE_PETITION_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.