ETV Bharat / state

ஆடுகளைக் கொன்ற சிறுத்தையால் விவசாயிகள் அச்சம்! - ஈரோடு சிறுத்தை ஆடுகளை கொன்றது

ஈரோடு: தாளவாடி அருகே சிறுத்தை ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை அடித்துக்கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

erode-leopard-killed-goats-made-farmers-in-distress
ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தையால் விவசாயிகள் அச்சம்!
author img

By

Published : Dec 30, 2019, 1:07 PM IST

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மரியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (70). இவர் ஆடு, மாடுகளைப் பராமரித்து வளர்த்து வருகிறார்.

ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தையால் விவசாயிகள் அச்சம்!

மரியாபுரம் வனப்பகுதியில் சாமிநாதன் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு மாலையில் பட்டியில் அடைத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டுப்பட்டிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு ஆடுகளைக் காணவில்லை.

இதையடுத்து, ஆடுகளைத் தேடிய சாமிநாதன், இரு ஆடுகள் கடித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் உடல் பாகங்கள் தின்று பாதி உடலோடு காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தது.

erode-leopard-killed-goats-made-farmers-in-distress
சிறுத்தையின் கால் தடம்

இதுகுறித்து சாமிநாதன் உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர். சிறுத்தை இரண்டு ஆடுகளை அடித்துக்கொன்றதால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஆடு

இதையும் படிங்க: சிறுத்தையின் பிடியில் நாய்: பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி!

Intro:Body:tn_erd_03_sathy_leopard_attack_vis_tn10009

ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து 2 ஆடுகளை அடித்துக்கொன்றதால் விவசாயிகள் அச்சம்அடைந்துள்ளனர்.

தாளவாடி மலைப்பகுதியில் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த சிறுத்தை 2 ஆடுகளை அடித்துக்கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மரியபுரம் சேர்ந்தவர் சாமிநாதன்(70). இவர் ஆடு,மாடுகள் பாரமரித்து வருகிறார். மரியாபுரம் வனப்பகுதியில் சாமிநாதன் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு மாலையில் பட்டியில் அடைத்தார். ஞாயிற்றுக்கிழமை ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்லை. இதையடுத்து சாமிநாதன் ஆடுகளை தேடிப்பார்த்தபோது இரு ஆண்டுகள் கடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. அதன் உடல் பாகங்கள் தின்று பாதி உடலோடு காணப்பட்டது. அங்கு ஆய்வு செய்த போது சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சாமிநாதன் உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர். சிறுத்தை 2 ஆடுகளை அடித்துக்கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.