ETV Bharat / state

நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயம் - நிலத்தகராறு

ஈரோடு : காசிபாளையம் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட நிலத்தகராறில் ஐந்து பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலத்தகராறில் மோதல் அடிபட்ட பெருமாள்
author img

By

Published : Apr 10, 2019, 7:34 PM IST

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திநகர் பகுதியில் பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பூமி 40 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்திற்கு ஐந்து பேர் பங்குதாரராக இருக்கும் பட்சத்தில் சண்முகம் என்பவர் யாருக்கும் தெரியாமல் வள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வஞ்சிதுரைக்கு 40 செண்ட் இடத்தை விற்றுள்ளார். இந்த சம்பவம் மற்ற நான்கு பேருக்கு தெரிய வர இடத்தகராறு கோர்ட் வரை சென்றது.

இவ்வழக்கு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும்நிலையில் இடத்தை வாங்கிய வஞ்சிதுரை அடிக்கடி அடியாட்களுடன் வந்து பெருமாள் -செல்வி தம்பதியினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழலில், மூன்று கார்களில் 20 க்கும் மேற்பட்ட அடியாட்களை அழைத்து வந்த வஞ்சிதுரை, வாங்கிய இடத்தை ஒப்படைக்கக் கோரி பெருமாள் மற்றும் அவரது மகன்கள் தர்மராஜ், விஜயகுமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினார்.

அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பெருமாள் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முயன்றபோது அடியாட்கள் காடுகளுக்குள் புகுந்து தப்பியோடினர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தத் தாக்குதலில் பெருமாள் குடும்பத்தினர் மற்றும் வெங்கடேஷ்வரன் என்பவர் பலத்த காயமடைந்தனர்.

காயம்பட்ட ஐந்து பேரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நிலத்தகராறில் மோதல்: 5 பேர் காயம்

TN_ERD_SATHY_01_10_INJURY_VIS_TN10009
(VIS FTP இல் உள்ளது)

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் காந்திநகர் பகுதியில் பெருமாள் என்ற விவசாயிக்கும் அவரது சகோதரர் சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பூமி 40 செண்ட் உள்ளது. இப்பூமிக்கு ஐந்து நபர்கள் பங்கு தாரர்களாக உள்ள நிலையில் சண்முகம் பங்கு தாரர்களுக்கு தெரியாமல் வள்ளியாம்பாளையத்தை சேர்ந்த வஞ்சிதுரை என்பவருக்கு பல வருடங்களுக்கு முன்பு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதன் வழக்கு கோபி நீதி மன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இடத்தை வாங்கிய வஞ்சிதுரை அடிக்கடி ஆட்களுடன் வந்து பெருமாள் செல்வி ஆகியோர் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் இன்று மூன்று கார்களில் 20க்கும் மேற்பட் அடியாட்களை அழைந்து வந்த வஞ்சிதுரை பெருமாள் செல்வி தம்பதியினரிடம் நிலத்தை ஒப்படைக்கக்கோரியுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் வஞ்சித்துரையுடன் வந்த அடியாட்கள் பெருமாள் செல்வி இவர்களது மகன்கள் தர்மராஜ் விஜயகுமார் ஆகியோரை கற்களை கொண்டு சரமாரியாக தாக்கத்தொடங்கியுள்ளனர். இதைப்பார்த்து அவர்களை தடுக்க வந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரையும் இக்கும்பல் தாக்கியுள்ளது. இதில் பெருமாள் செல்வி வெங்கடேஸ்வரன் தர்மராஜ் விஜயகுமார் ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களது அலரல் சத்தம் கேட்டும் ஏதோ பெரிய தகராறு நடைபெறுகிறது என்றும் ஒன்று கூடிய அப்பகுதி பொதுமக்கள் தாக்குதல் நடத்தியவர்களை சுற்றிவளைத்து எதிர்தாக்குதால் நடத்த தொடங்கியுள்ளனர். அதில் நிலைகுலைந்த கும்பல் திரும்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடத்தூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் தாக்குதல் குப்பலை பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் இங்கிருந்து காடுகளில் புகுந்த தப்பியோடியுள்ளனர். இதனால் ஆத்திமடைந்த இப்பகுதி பொதுமக்கள் அவர்கள் வந்த மூன்று கார்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் கார்களின் டயர்களை கிழித்தும் கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை போக்கிக்கொண்டனர். அடியாட்கள் தாக்குதலில் காயமடைந்த ஐந்து பேரையும் காவல்துறையினர் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுபிவைத்து தாக்குதல் கும்பல் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவத்தினால் காசிபாளையம் காந்திநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TN_ERD_SATHY_01_10_INJURY_VIS_TN10009
(VIS FTP இல் உள்ளது)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.