ETV Bharat / state

ஜவுளித் தொழிலாளியின் உயிரைக் காவு வாங்கிய கடன்! - suicide

ஈரோடு: கடன்பெற்ற பணத்திற்கு கூடுதலாக வட்டி செலுத்தக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

erode-kandhu-vatti-suicide
author img

By

Published : May 2, 2019, 5:34 PM IST

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஜவுளி நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்த இவர் தனது சொந்த தேவைக்காக திலிப்குமார் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தில் ரூ.30 ஆயிரத்தை திருப்பி செலுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாகவே மீதமுள்ள பத்தாயிரம் ரூபாயை செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், திலிப்குமார் வட்டியுடன் சேர்த்து ரூ.40 ஆயிரம் பணத்தை செலுத்துமாறு ஸ்ரீதரிடம் கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் இரு தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிக்காத நிலையில், நேற்று (மே 1) மாலை உயிரிழந்தார்.

இதனால் ஸ்ரீதரின் உடலை வாங்க மறுத்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான நிதி நிறுவன உரிமையாளர் திலிப்குமார், வெங்கடேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் தொல்லையால் தற்கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு ஸ்ரீதரின் உடலை பெற்றுச் சென்றனர்.

ஈரோடு  02.05.2019
சதாசிவம்

ஈரோட்டில் கடன் பெற்ற பணத்திற்கு கூடுதலாக வட்டி செலுத்த கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஜவுளி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ஜவுளி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது சொந்த தேவைக்காக தீலிப்குமார் என்பவரின் நிதி நிறுவனத்தில் 40ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதனை தொடர்ந்து வாங்கிய பணத்தில் 30ஆயிரம் ரூபாயை செலுத்திய நிலையில் மீதமுள்ள 10ஆயிரம் ரூபாயை ஸ்ரீதரால்  சில மாதங்களாக செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் தீலிப்குமார் வட்டியுடன் சேர்ந்து 40ஆயிரம் ரூபாயை செலுத்துமாறு ஸ்ரீதரிடம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.  இதில் மனமுடைந்த ஸ்ரீதர் இருதினங்களுக்கு முன்னர் பூச்சி மருந்து குடித்து  தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.இந்நிலையில் சிகிச்சை பலன்றி ஸ்ரீதர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் அவரது உயிரிழப்புக்கு காரணமான நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தீலிப்குமார் மற்றும் வெங்கடேஷ் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்படனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்டவரகளை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு ஸ்ரீதரின் உடலை பெற்று  சென்றனர்... 

Visual send mojo app
FILE:NAME:TN_ERD_01_02_KANDHU_VATTI_SUIDE_VISUAL_7204339

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.