ஈரோடை அடுத்த செட்டிபாளையம் திருப்பதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கட்டட ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் சசிகுமார் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அவரது மனைவி சாந்தியும் தன் உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர்களின் வீடு பூட்டிருந்ததை நோட்டமிட்ட திருடர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து திருடிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து வீடு திரும்பிய சாந்தி வீட்டிலிருந்த 39 சவரன் நகைகள், மடிக்கணிணி, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவை திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் காவல் துறையினரிடம் அளித்த புகாரின்பேரில் உடனடியாகத் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், திருடர்களின் தடயங்களைக் கைப்பற்றி, அவர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க :தண்ணீர் இல்லாத பொதுக்கழிப்பறை - மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!