ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ' இந்த ஆண்டு பவானிசாகர் அணை நிரம்பி பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், நீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது. பவானிசாகர் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரை 7 இடங்களில் தடுப்பணை கட்டி, உபரி நீரை தேக்கி வைத்து, குளம் - குட்டைகளில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பவானிசாகர் அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கிளைவாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளில் உள்ள 1 இலட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு, நெல் பயிரிட நன்செய் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் டிசம்பர் மாத இறுதி வரை திறக்கப்பட வேண்டும்.
மேலும் ஒற்றைப்படை மதகுகளில் உள்ள 1 இலட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு 2021 ஜனவரி முதல் வாரத்தில் நிலக்கடலை பயிரிடுவதற்கு தண்ணீர் திறப்பு தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். தேதியை முன்கூட்டியே அறிவித்தால் விவசாயிகள் நிலத்தை உழுது, தயார் செய்வதற்கும் இடு பொருட்கள் வாங்குவதற்கும் வசதியாக இருக்கும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்