ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு.. களநிலவரம் என்ன?

மும்முரமாக நடந்து வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 27, 2023, 12:31 PM IST

ஈரோடு: தமிழ்நாடே உற்றுநோக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலையில் 7:14 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் வாக்களித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மாற்றத்திற்காகப் பெருமகிழ்ச்சியுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணிகள் திருப்திகரமானதாக உள்ளது. எனது வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. மக்களின் ஆர்வத்தைப் பார்த்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது' என்று தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து வாக்களிப்பதற்குக் கட்சி வேட்டி துண்டுடன் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்தை தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர். பின்னர், மாற்று உடையில் மீண்டும் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எனது வாக்கைப் பதிவு செய்தேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஜனநாயக கடைமையைச் செய்ய வேண்டும்' என்றார்.

கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார். இந்நிலையில், வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிவதாக அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், வாக்கு மை அழிவதாக அளித்த புகாரில் தீர்வு காணப்பட்டதாகச் செய்தியாளர்களிடத்தில் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஈரோடு கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார் கோயில் வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இந்நிலையில், இடையன்காட்டு வலசு பகுதியில் வாக்குச்சாவடி எண் 138,139 ஆகிய இடங்களில் பணப்பட்டுவாடா நடந்ததாகத் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: Erode East Live Update: 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.