ETV Bharat / state

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்டம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு! - ஈரோடு மிக்ஜாம் புயல்

Relief good from Erode: சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோட்டில் இருந்து பெட்ஷீட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்டம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 2:02 PM IST

ஈரோடு: மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்கு உள்ளே மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெறப்பட்ட பொருட்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக 3 ஆயிரம் பெட்ஷீட், பிஸ்கட், பிரட், தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொருட்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார் ஆகியோர் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. நிவாரண பணிக்காக 60 தூய்மைப் பணியாளர்கள் காஞ்சிபுரம் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.