ஈரோடு கொங்காளம்மன் வீதியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி தலைமையிலான அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரானாசந்த் என்பவருக்குச் சொந்தமான குடோனில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மாநகரப் பகுதிகளில் இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கம்: திருநாவுக்கரசர்