கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக கிருமி நாசினி தெளித்தல், கைகளை சுத்தமாக கழுவுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள செம்பருத்தி வீதியில் பொதுமக்கள் புதிய முயற்சியை கையாண்டுள்ளனர். இவர்களுடைய வீதி முழுக்க வேப்பிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் சாணத்தில் மஞ்சள் கலந்து வீதி முழுவதும் தெளித்தனர்.
பின்னர் வீதியின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளை சுத்தமாக கழுவினர். இதையடுத்து வீதியில் உள்ள அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் வீதியில் உள்ள வீடுகளின் முன்பு காலை, மாலை வேளைகளில் வேப்பிலை புகைபோட்டு கரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: 'நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்தும் நேரம் இது' - கமல் அறிவுறுத்தல்