ETV Bharat / state

கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!

author img

By

Published : Dec 25, 2019, 11:32 PM IST

ஈரோடு: ஓட்டுனரின் உயிரிழப்பிற்கு காரணமான சுங்கச்சாவடி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டன்ர்.

பொதுமக்கள் சாலை மறியல்!
பொதுமக்கள் சாலை மறியல்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் கண்ணன் (33). இவர் ஈரோடு மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டி வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கண்ணன் கடந்தபோது கீர்த்தி(29) என்பவரது கார் எதிர்பாராதவிதமாக அவர்மீது மோதியது.விபத்தில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார்.

இந்த விபத்திற்கு முறையான நுழைவு பாலம் அமைக்காத சுங்கச்சாவடி நிர்வாகம் தான் பொறுப்பு என விஜயமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு வழிதடங்களிலும் வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்!

பிறகு அங்கு வந்த ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பெருந்துறை டி எஸ் பி ராஜ்குமார் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் டோல்கேட் நிர்வாகத்தை அழைத்து பேசி தீர்வு ஏற்படுத்துவதாக கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க...குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஆஸி. வீரர்கள்

Intro:ஈரோடு ஆனந்த்
டிச25

கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!

பெருந்துறை அடுத்துள்ள சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பகுதியில் புறவழி சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதனால் அப்பகுதி மக்கள் முறையான நுழைவு பாலம் அமைக்கவேண்டும் என சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் கண்ணன் (33), இவர் ஈரோடு மாவட்டம்
பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் குடியிருந்து வருவதோடு தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் இரு சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது கீர்த்தி(29) என்பவர் கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பலியானார்.

Body:இதற்கு முறையான நுழைவு பாலம் அமைக்காத டோல்கேட் நிர்வாகம் தான் பொறுப்பு என
விஜயமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு வழிதடங்களிலும் வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

Conclusion:பிறகு அங்கு வந்த ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பெருந்துறை டி எஸ் பி ராஜ்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். வரும் மூன்றாம் தேதி டோல்கேட் நிர்வாகத்தை அழைத்து பேசி தீர்வு ஏற்படுத்துவதாக கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.