ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரம் - ஈரோடு மாநகராட்சி

ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று மாலையோடு பிரசாரம் முடிவடைந்த நிலையில், நாளை நடைபெறும் தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

author img

By

Published : Feb 26, 2023, 1:56 PM IST

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்த நிலையில் நாளை கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா காலமானதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் ஆனது 27ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர் ஆனந்த் உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 45 மாற்று பாலினத்தவர், ராணுவ வீரர்கள் வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 26ஆயிரத்து 898 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் 52 வாக்குப்பதிவு மையமும் 238 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் 238 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் ஐந்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நாளை இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியானது இன்று காலை தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியிலும் ஆன கிருஷ்ணனுண்ணி மற்றும் கிழக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது தொடங்கி வைத்தனர்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணியை பார்வையிட்ட பின், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி அளித்த பேட்டியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் இருந்து மண்டலம் வாரியாக பிரித்து கொண்டு செல்லப்படுகின்றன.

ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறை தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இவை ஒப்படைக்கப்பட்டு தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜோனல் டீமுடன் பாதுகாப்புக்காக போலீசார் செல்கின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 பறக்கும் படை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

கள்ள ஓட்டுக்களை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி வாரியாக தனிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் இருந்தாலும் போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

வாக்குச்சாவடி வாரியாக ASD பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும்போது அங்கு இல்லாதவர்கள், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் ஆகியோரை கண்டறிந்து ASD தனி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கப்படும்.

தேர்தலின் போது ASD பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க வந்தால், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலும் கூட மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பே இல்லை. கள்ள ஓட்டு போட வந்தாலும் கூட தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பட்டியலில் பெயர் இருந்தாலும் போதுமான அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். நுண்பார்வையாளர்கள் 238 வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'இந்திய மக்களின் சராசரி வயது 29.. எம்.பி.க்களின் சராசரி வயது 54; அவை மாறணும்' மாணவர்கள் மத்தியில் கமல் உரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.