தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெதச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வழிப்பாட்டு தளங்கள், சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பவானிசாகர் அணை பூங்கா கால வரையறையின்றி மூடப்படும் என பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது. இந்தப் பூங்கா பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 10 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டாச்சு!