ஈரோடு மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் விழா மார்ச் 4ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.
இந்தக்கோயில் திருவிழாவில் குண்டம் விழா மிகவும பிரசித்துப்பெற்றது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தத் தொடங்கினர்.
இந்த குண்டம் விழாவில் ஆண், பெண் பக்தர்கள் வரிசையாக தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் வேகமாக தீக்குண்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சரோஜா என்ற பெண் தீ குண்டத்தில் நடந்துசெல்கையில் நிலைதடுமாறி விழுந்தார்.
அப்போது தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு முதலுதவிக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.