ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு -கர்நாடக எல்லையான தாளவாடியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மருத்துவர், செவிலியர் உள்பட 27 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
கடந்த மாதம் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகள் மூடப்பட்டதால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது மலைக் கிராமமான தாளவாடியில் வேகமாக பரவிவரும் கரோனாவால் மாநில எல்லையின் சாலைகள் மீண்டும் அடைக்கப்பட்டது.
அதேபோல் தாளவாடி இருந்து ஒசூர் செல்லும் சாலை, தலமலை செல்லும் சாலையை அலுவலர்கள் தகரசீட் வைத்து அடைத்தனர்.
தாளவாடி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் இன்று 50 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யபட்டதைத் தொடர்ந்து மலைக் கிராமங்களில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தாளவாடியில் வெளியாள்கள் நுழையாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு நோய்த்தொற்று கட்டுப்படுத்தும்படும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சி