ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி திருமண மேடையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த சபீர் அன்சில் என்பவருக்கும், சாஜிதா பர்வீன் என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்ததும் மணமேடையில் மணமகன், மணமகள் இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர். இதேபோல் திருமணத்திற்கு வந்த பெரும்பாலான பெண்களும் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: தேனி, நடிகர் ரஜினிகாந்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு