ETV Bharat / state

இரவில் கார் ரேஸ்; காவலாளியின் உயிரை பறிக்கும் வீடியோ வைரல்! - youngsters

ஈரோடு: குடிபோதையில் இளைஞர் ஓட்டிய கார் வேகமாக மோதியதில் நகைக்கடை காவலாளி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் ரேஸ்
author img

By

Published : May 25, 2019, 11:34 PM IST

ஈரோட்டில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஆர். கே. வி சாலையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவரைக் கொருவர் முந்திக் கொண்டு காரை அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தனியார் நகைக்கடையின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளி மீது மோதியது. இதில், நகைக்கடை காவலாளி 200அடி தூரத்தில் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மேலும், பாலமுருகன் என்பவரும் படுகாயமடைந்தார். இதனைக்கண்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பாலமுருகனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், விபத்து குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலாளி மீது மோதிய ரேஸ் கார்

இந்தக் கோர விபத்து குறித்த சிசிடிவி வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு  25.05.2019
 சதாசிவம்

ஈரோட்டில் நள்ளிரவில் மது போதையில் காரில் சென்ற வாலிபர்கள் ஒருவரை ஒருவர் முந்திய செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக நகைக்கடை காவலாளி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரோட்டில் நள்ளிரவில் சில வாலிபர்கள் மது போதையில் கார் பந்தயத்தில் ஈடுபடுள்ளனர்.இதனை தொடர்ந்து ஆர். கே. வி சாலையில் பந்தயத்தில் பங்கேற்ற கார் அதிவேகமாக வந்துள்ளது.அப்போது கார் கட்டுபாட்டை மீறி  தனியார் நகைக்கடை காவலாளி மீது மோதியது இதில் காவலாளியை 200அடி தூரம் வரை இழுத்து சென்று மின் கம்பத்தில் நின்றது.இதில்  நகைக்கடை காவலாளியான பெரியசேமூர்  பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருங்கல்பாளையம் காவல்நிலைய போலீசார் உயிரிழந்த ராஜலிங்கத்தின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த நாமக்கல் மாவட்டம் மோர்பாளையத்தை காவலாளியான பாலமுருகன் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த கார் விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களை தேடி வருகின்றனர்... 

Visual send ftp
File name:TN_ERD_02_25_ACCIDENT_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.