ETV Bharat / state

கால்வாய்களில் சாயக்கழிவுகள் கலப்பதில்லை - அமைச்சர் கருப்பணன் - ஈரோடு செய்தி

ஈரோடு: விவசாயக் கால்வாய்களில் சாயக்கழிவுகள் கலப்பதாக கூறப்படுவது தவறான செய்தி என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன்
author img

By

Published : May 23, 2020, 7:12 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைக்கு உட்பட்ட அம்மாபேட்டையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டதமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் 900 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த இரண்டாயிரம் குடும்பத்தினருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறைகள் திறந்திருந்த போதும் சரி, தற்போது 60 நாட்களாக சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ள போதும் சரி கால்வாய்களில் சாயக்கழிவு நீர் கலப்பதாக தவறான தகவல்கள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. கால்வாய்களில் சாயக்கழிவு கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்படும் நிலையில், மேட்டூர் வலது கரை, இடது கரை வாய்கால்களில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரைகளின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருவதால் இந்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படாது.

கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் செல்வதற்கு வசதியாக கால்வாய் சுத்தப்படுத்தும் பணி, கரைகள் உயர்த்தும் பணி நடைபெற்று வருவதால் இந்தப் போகத்திற்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு அடுத்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், பசுமை மண்டலங்களாக மாறிய மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து முதலமைச்சரோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.