ETV Bharat / state

கொடிவேரி அணை கால்வாயில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு - Kodiveri Dam Canal

பெரிய கொடிவேரி அணை கால்வாயில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பெரிய கொடிவேரி அணை
பெரிய கொடிவேரி அணை
author img

By

Published : Oct 17, 2020, 6:17 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பெரியகொடிவேரி நீர்தேக்க பகுதியில் அருவிபோல தண்ணீர் கொட்டுவதால் அதில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர் சந்தோஷ் மற்றும் நண்பர்கள் நேற்று (அக்.16) பெரிய கொடிவேரி அணைக்குச் சென்று அங்குள்ள கால்வாய் நீரில் உற்சாகமாக குளித்துள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சந்தோஷ் நீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனில்லாமல் போனதால், இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள் சந்தோஷை தேடிபார்த்தபோது இறந்த நிலையில் சந்தோஷ் சடலம் கரையோரம் கண்டெக்கப்பட்டது.

இதனையடுத்து உடற்கூராய்விற்காக அவர் உடல் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கோபிசெட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நீச்சல் பழகச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.