ஈரோடு: தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு மாநில எல்லையில் இருந்து யானைகள் தமிழ்நாட்டில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஜீரகள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள அருள்வாடி மலைக்கிராமத்தில் யானைகள் உலாவுவதை கிராமமக்கள் பார்த்தனர்.
மானாவாரி நிலத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் நிறைந்திருப்பதை கண்ட கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 50-க்கும் மேற்பட்ட யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். விவசாயப் பணிகள் மேற்கொள்வதை தவிர்த்தனர்.
வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிராம மக்கள் இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் கால்நடைகளை மேச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடும் பனி காரணமாக மாநில எல்லையில் யானைகள் உலாவுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போக்கு காட்டிய மக்னா யானை - சுற்றி வளைத்து பிடித்த வனத்துறை