ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந்த வனவிலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகிவருகிறது.
ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகனாரை, ஜோரகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார். இவர் விவசாய நிலத்தில் வாழை, தென்னை சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வந்த 15க்கும் மேற்பட்ட யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்தது. அங்கு சாகுபடி செய்த வாழைகளை தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.
இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழைப்பயிர் நாசமானது. இதைப் பார்த்த விவசாயி செல்வகுமார் கிராம மக்களுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து அப்பகுதிக்கு திரண்டு வந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும் தீப் பந்தம் காட்டியும் யானைகளை துரத்தினர்.
யானைகள் கூட்டமாக இருந்ததால் சிறிது தூரம் செல்வதும் மீண்டும் தோட்டத்துக்குள் புகுவதுமாக போக்கு காட்டியது.
இந்த யானைகள் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விவசாயநிலத்தில் உலாவியதால் வாழைகள் மேலும் சேதமடைந்ததுள்ளது. இது விவசாயிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டாப்சிலிப்பில் ஜாலியாக ரிலாக்ஸ் பண்ணும் யானைகள்!