ETV Bharat / state

விவசாயியின் ஜீப்பை கவிழ்த்திய யானை.. வனத்துறையினரின் வாகனம் முற்றுகை!

கோவை தாளவாடி மலைப்பகுதியில் யானையை விரட்ட சென்ற ஜீப்பை காட்டு யானை தள்ளிவிட்டு கவிழ்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயியின் ஜீப்பை கவிழ்த்திய யானை.. வனத்துறையினரின் வாகனம் முற்றுகை!
விவசாயியின் ஜீப்பை கவிழ்த்திய யானை.. வனத்துறையினரின் வாகனம் முற்றுகை!
author img

By

Published : Dec 28, 2022, 5:49 PM IST

கோவை தாளவாடி மலைப்பகுதியில் யானையை விரட்டச் சென்ற ஜீப்பை காட்டு யானை தள்ளிவிட்டு வீழ்த்தியது

ஈரோடு: தாளவாடி மலைப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்டப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியேறும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று (டிச.28) அதிகாலை கரளவாடி ரங்கசாமி கோயில் தோட்டம் அருகே விவசாய தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது. பின்னர், அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை தின்றும் மிதித்தும் அந்த யானை சேதப்படுத்தியுள்ளது.

இதனால் விவசாயிகள் ஜீப், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி காட்டு யானையை விரட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது காட்டு யானை ஜீப்பை பிடித்து தள்ளியதால், ஜீப் சாய்ந்து கவிழ்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் தாமதமாக வந்ததால், விவசாயிகள் வனத்துறையினர் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மக்காச்சோளம் ஏற்றிச்சென்ற மினி வேனை வழிமறித்த யானை - வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.