ETV Bharat / state

யானைகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை உயிரிழப்பு!

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த 25 வயதுள்ள ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஆண்யானை உயிரிழப்பு
author img

By

Published : Jun 14, 2019, 9:30 PM IST

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் சில நாட்களாக காலில் ஏற்பட்ட காயத்துடன் 25 வயதுள்ள ஆண் யானை சுற்றித் திரிந்தது. காலில் வீக்கம் அதிகமாக இருந்ததால் நடக்க முடியாமல் தவித்துவந்த அந்த யானை, நேற்று வெளுமுககுட்டை என்ற இடத்தில் நடக்கமுடியாமல் படுத்தது.

ஆண் யானை சாவு

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், யானைக்கு குளுகோஸ், திரவ உணவுகள் வழங்கி முதலுதவிகளை மேற்கொண்டனர். இதற்கிடையே, யானையை எழுந்து நிற்க வைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டுவருவதற்கு வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால், அதற்குள் யானையின் உயிர் பிரிந்துவிட்டது. மேலும், இச்சம்பவத்திற்கு யானைகள் இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம்
94438 96939,88257 02216
14.06.2019

கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயத்துடன் உயிருக்கு போராடிய  25 வயது ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டை காப்புக்காட்டில் சில நாள்களாக காலில் ஏற்பட்ட காயத்துடன் 25 வயதுள்ள ஆண்யானை சுற்றி திரிந்தது. காலில் வீக்கம் இருந்ததால் யானைால் நடக்க முடியாமல் தவித்தது. 
 இந்நிலையில் நேற்று  வெளுமுககுட்டை என்ற இடத்தில்  நடக்கமுடியாமல் படுத்தது. அங்கு வந்த கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான  மருத்துவகுழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் யானைக்கு குளோகோஸ், திரவ உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் யானையை எழுந்து நிற்பதற்கு உதவியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டது. வனப்பகுதி வழியாக செல்ல சரியான பாதை இல்லாததால் தனியார் தோட்டம் வழியாக  ஜேசிபி எந்திரம் சென்றபோது அங்குள்ள தோட்டத்து பணியாளர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் யானையை எழுந்து நிற்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சி பலன்அளிக்கவில்லை.     இருப்பினும் யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் எழுந்து நடக்க முடியவில்லை. இந்நீலையில் சிகிச்சை பலனின்றி யானை  உயிரிழந்தது யானைகள் இடையே ஏற்பட்ட மோதலில் யானைக்கு காயம் ஏற்பட்டு காயத்தின் தீவிரம் காரணமாக யானை உயிரிழந்ததா க வனத்துறையினர் தெரிவித்தனர்

TN_ ERD_ 01_14_SATHY_ ELEPHANT DEATH VIS TN0009
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.