ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி எனும் ஊரைச் சேர்ந்தவர் மாதேவப்பா. இவரது மனைவி சின்னத்தாயி என்கிற நாகரத்தினம் (46), நேற்று (மார்ச்.14) மூன்று பெண்கள் வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக கூட்டம் கூட்டமாக அங்கு வந்துள்ளன.
அப்போது திடீரென ஒரு யானை விறகு சேகரிக்கச் சென்ற பெண்களைத் துரத்தத் தொடங்கியுள்ளது. யானையிடமிருந்து உயிர் பிழைப்பதற்காக நால்வரும் தப்பியோடியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக நாகரத்தினம் மட்டும் யானையிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் யானை அவரை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் காவல் துறையினர், வனத்துறையினர் நாகரத்தினத்தின் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கமல் காரின் மீது தாக்குதல்.. மூக்கை உடைத்த கட்சியினர்..