ETV Bharat / state

பள்ளி வாகனத்தில் சிக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 14, 2022, 3:28 PM IST

பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 8ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து, அதே வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் உயிரிழப்பு
மாணவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு பகுதியைச்சேர்ந்தவர்கள் மாதையன்-தங்கமணி தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் திவாகர்(13). இவர் பூதப்பாடி பகுதியில் செயல்படும், அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று(நவ.14) காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய மாணவன் பள்ளி வாகனத்தில் ஏறி உள்ளார். பள்ளி வாகனமானது அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

அப்போது அதே வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாணவன் திவாகர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்து மோதி விபத்து; பைக்கில் சென்றவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.