நாமக்கல்: இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு முட்டை பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டினர். கிளீனர் ரித்திஸ் உடனிருந்தார். அதிகாலை நேரத்தில் கிளீனர் ரித்தீஸிடம் லாரியை ஓட்டுமாறு ஓட்டுநர் கூறி தூங்கிவிட்டார்.
அரியப்பம்பாளையம் கோபி சத்தி சாலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டீசல் டேங்க், முகப்பு பகுதி சேதமடைந்தது. லாரி கவிழாமல் அப்படியே நின்றதால் ஓட்டுநர், கிளீனர் காயமின்றி உயிர்த் தப்பினர்.
லாரியில் இருந்த ஆயில் சாலையில் கொட்டியதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் கோர லாரி விபத்து!- பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!