ETV Bharat / state

'இருமொழிக்கொள்கைதான் நிறைவேற்றப்படும்' அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழ்நாட்டில் இருமொழிக் கல்விக் கொள்கைத்தான் நிறைவேற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan
author img

By

Published : Jun 2, 2019, 10:58 AM IST

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தன் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, "கரிக்குலம் பாடத்திட்டத்தில் இந்தியாவே வியக்கும் வகையில் 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதே ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு காரணமாகும்.

மூன்று ஆண்டு காலத்தில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். ஆனால், தற்போது இரண்டே ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் 12 ஆண்டு காலத்திற்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

210 நாட்கள் தொடர்ந்து விடுமுறை இல்லாமல் இருந்தால் மட்டுமே, புதிய பாடத்திட்டப் பாடங்களை முழுமையாக முடிக்க முடியும். புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளான மூன்றாம் தேதி முதலமைச்சர் திருக்கரங்களால் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து கேளிவிக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இரு மொழிக்கொள்கை என்பது முடிவாக இருந்தது. சட்டப்பேரவையில் கூட இரு மொழிக்கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை தான் நடைமுறைப்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.

TN_ERD_05_01_SATHY_KAS_MINISTER_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

ஜுன் 3ஆம் நேதி பள்ளிக்கள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் உருவாக பாடப்புத்தகங்கள் முதல்வர் வெளியிட உள்ளார். 
கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_05_01_SATHY_KAS_MINISTER_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

ஜுன் 3ஆம் நேதி பள்ளிக்கள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் உருவாக பாடப்புத்தகங்கள் முதல்வர் வெளியிட உள்ளார். தமிழகத்தை பொருத்தவரை இரு மொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி….

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். ஜூன் மூன்றாம் தேதி  பள்ளிகள் திறக்கப்படுவதற்கு காரணம் கரிக்குலம் பாடத்திட்டதில் இந்தியாவே வியக்கும் வையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 3ஆண்டு காலத்தில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம் ஆனால் இருண்டே ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் 12 ஆண்டு காலத்திற்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதியபாடத்திட்டம் எல்யோருடைய பாரட்டையும் பெற்றுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் முழுமையாக கற்றுகொடுக்க வேண்டும் என்றால் 210 நாட்கள் தொடர்ந்து விடுமுறை இல்லாமல் இருந்தால் மட்டுமே புதிய பாடத்திட்டம் முழுமையாக முடிக்கப்படும். மாணவர் நலன் கருதி  பெற்றோர்களும் ஆசிரியர்களும்  பள்ளிகள் திறக்கும் நாளில் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம். புதிய பாடத்திட்டத்தில் உருவாக பாடப்புத்தங்கள் பள்ளி திறக்கும் நாளான மூன்றாம் தேதி முதல்வர் திருக்கரங்கலால் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா அனைவரும் இரு மொழிக்கொள்கை என்பது அவர்களது முடிவாக இருந்தது. சட்டமன்றதில் கூட இரு மொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்..

பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.